ADDED : ஆக 06, 2024 12:09 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் பூங்கா நகரில் உள்ள சந்தான விநாயகர் கோவிலில், கடந்த ஜூன் 16ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாட்களாக மண்டல அபிஷேக பூஜை நடைபெற்று வந்தது.
நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பூங்கா நகர், ராஜாஜி புரம், காமராஜபுரம், என்.ஜி.ஓ., நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நகராட்சிகளின் இணை இயக்குனர் கற்பகம், கோவில் நிர்வாக தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.