/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் பொன்னேரி குடியிருப்புவாசிகள் குமுறல் மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் பொன்னேரி குடியிருப்புவாசிகள் குமுறல்
மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் பொன்னேரி குடியிருப்புவாசிகள் குமுறல்
மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் பொன்னேரி குடியிருப்புவாசிகள் குமுறல்
மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் பொன்னேரி குடியிருப்புவாசிகள் குமுறல்
ADDED : ஜூன் 15, 2024 12:45 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னை அவென்யூ, பெருமாள்நகர் லட்சுமிநகர், துர்காநகர் ஆகிய பகுதிகளில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு மேற்கண்ட குடியிருப்பு பகுதிகளில் குறைந்த அளவிலான வீடுகள் இருந்ததால், இவற்றிற்கு, பொன்னேரி - தச்சூர் சாலையில், அரசு பேருந்து பணிமனை அருகே உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
தற்போது பெருகி வரும் குடியிருப்புகளுக்கும் அதே மின்மாற்றியில் இருந்து மின்வினியோகம் தொடர்கிறது.
இதனால் மின்பற்றாக்குறை மற்றும் குறைந்த மின்வினியோகம் ஏற்பட்டு வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் செயலிழக்கின்றன.
இரவு நேரங்களில் 'ஏசி' பேன் உள்ளிட்டவை சரிவர இயங்காமல், குடியிருப்புவாசிகள் துாக்கமின்றி தவிக்கின்றனர்.
மேற்கண்ட குடியிருப்பு பகுதிகளுக்கு தனி மின்மாற்றி பொருத்தி சீரான மின்வினியோகம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.
அதையடுத்து, மேற்கண்ட குடியிருப்பு பகுதிகளுக்கு தனி மின்மாற்றி பொருத்துவதற்கு மின்வாரியம் திட்டமிட்டு, அதற்கான தளவாடங்கள், கம்பங்கள் ஆகியவை கொண்டு வரப்பட்டன.
ஒரு மாதம் ஆகியும், அதற்கான கட்டமைப்பு பணி மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.
குறைந்த மின்அழுத்தம் பிரச்னைக்கும் தீர்வு இன்றி கிடப்பதால், குடியிருப்புவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
மின்மாற்றி பொருத்துவதில் மேலும் தாமதமாகும் நிலையில், அடுத்தகட்ட போராட்டங்களை மேற்கொள்ளவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.