/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வாலிபரை தாக்கி கொலை முயற்சி நண்பர்கள் நான்கு பேர் கைது வாலிபரை தாக்கி கொலை முயற்சி நண்பர்கள் நான்கு பேர் கைது
வாலிபரை தாக்கி கொலை முயற்சி நண்பர்கள் நான்கு பேர் கைது
வாலிபரை தாக்கி கொலை முயற்சி நண்பர்கள் நான்கு பேர் கைது
வாலிபரை தாக்கி கொலை முயற்சி நண்பர்கள் நான்கு பேர் கைது
ADDED : ஜூன் 15, 2024 12:44 AM

திருத்தணி:திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மகி மகன் சியாம்சுந்தர், 24. இவர் சென்னை அடுத்த ஆவடி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் ஆவடியில் இருந்து மின்சார ரயில் மூலம் இரவு, 10:30 மணிக்கு திருத்தணிக்கு வந்தார்.
பின் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது, அவரது நண்பர்கள், திருத்தணி ஜோதிநகர் சஞ்சய்குமார், 24, விக்ரம், 21, தாழவேடு காலனி சேர்ந்த, 17 வயது சிறுவன், நேரு நகர் ஜெயக்குமார், மற்றும் லோகேஷ், 22 ஆகியோர், சியாம்சுந்தரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி பாலாஜி நகர் ஏரிக்கரைக்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து, அங்கு மது அருந்திய ஐந்து, பேரும், சியாம்சுந்தரிடம், 'உன்னால் தான், நாங்கள் வழிப்பறி திருட்டு வழக்கில் போலீசில் மாட்டிக் கொண்டோம்.
நீ தான் எங்களை காட்டி கொடுத்தாய்' என, உருட்டை கட்டை மற்றும் கைகளால் தாக்கினர்.
மேலும் உன் அருகில் நாட்டுவெடிக்குண்டு வைத்துள்ளோம், என கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். சியாம்சுந்தர் அங்கிருந்து வந்த பின், அந்த இடத்தில் நாட்டுவெடிக்குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இத்தகவலையடுத்து திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார் நேற்று ஏரிக்கரையில் சோதனை நடத்திய போது, அங்கு பதுங்கியிருந்த நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் 17 வயது சிறுவன் திருவள்ளூர் மாவட்ட சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தப்பியோடிய லோகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.