/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆசானபூதுார் தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை ஆசானபூதுார் தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
ஆசானபூதுார் தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
ஆசானபூதுார் தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
ஆசானபூதுார் தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 09, 2024 11:02 PM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆசானபூதுார்மேடு கிராமத்தில், அங்குள்ள பாசன ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று அமைந்து உள்ளது.
இந்த தரைப்பாலம் உரிய பராமரிப்பு இன்றியும் தடுப்பு சுவர் அமைக்கப்படாமலும் இருக்கிறது. பாலத்தின் கான்கிரீட் தளம், பக்கவாட்டு பகுதிகள் முழுதும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.
வஞ்சிவாக்கம், பெரும்பேடு, மடிமைகண்டிகை, வீரங்கிமேடு கிராமவாசிகள் இந்த பாலத்தின் வழியாக பயணித்து வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களும் பயன்படுத்துகின்றன.
தற்போது கால்வாயில் மழைநீர் தேங்கியிருப்பதால், இப்பகுதியில் மின்விளக்கு வசதியும் இல்லாத நிலையில், வாகன ஓட்டிகள் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
எதிர் எதிரே லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்கும்போது, பாலத்தின் விளிம்பில் செல்கின்றன. அவை, கால்வாயில் தவறி விழுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேற்கண்ட பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்திடவும், கான்கிரீட் தளத்தை சீரமைக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.