/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 09, 2024 11:01 PM

ஊத்துக்கோட்டை,: மாநிலம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, பள்ளிகள் திறப்பதை ஒட்டி, அந்தந்த பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அந்தந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தியது.
சில பள்ளிகளில் பெயரளவிற்கு சீரமைக்கும் பணி நடந்துள்ளது. ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
இங்கு வகுப்பறைகள் பின்புறம் செடிகள் வளர்ந்துள்ளன. கழிப்பறை அருகேயும் செடிகள் வளர்ந்துள்ளன. இதன் வாயிலாக, பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வகுப்பறைகளில் ஊடுருவ வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.