கோவிலில் திருடிய 3.5 சவரன் மீட்பு
கோவிலில் திருடிய 3.5 சவரன் மீட்பு
கோவிலில் திருடிய 3.5 சவரன் மீட்பு
ADDED : ஜூலை 19, 2024 02:06 AM

திருத்தணி:திருத்தணி பெரியார் நகர் பகுதியில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு அம்மன் கழுத்தில் இருந்த, 2 சவரன் தங்க தாலி செயின் மாயமானது.
இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகள் வாயிலாக, நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ், 27, என தெரிய வந்தது.
மேலும், திருத்தணி பெரியார் நகரில் காளிகாம்பாள் அம்மன் கழுத்தில் இருந்த, ஒன்றரை சவரன் தங்க தாலி செயினை திருடியதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் சதீஷை கைது செய்து, இரண்டு கோவில்களிலும் திருடிய மூன்றரை சவரன் தங்க தாலி செயின்களை பறிமுதல் செய்தனர்.