ADDED : ஜூலை 19, 2024 02:06 AM

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சின்னம்மாபேட்டை கிராமம். இங்கு ஓடை கால்வாய் மீது நபார்டு திட்டத்தின் கீழ் 3கோடியே 57லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு கடந்த, 2022ம் ஆண்டு வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில் உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்காமலும் ஒளிரும் விளக்குகள், பாலம் உள்ளதற்கான எச்சரிக்கை பலகை உள்ளிட்ட ஏதும் அமைக்கப்படவில்லை.
இதனால் இரவு நேரங்களில்உயர்மட்ட பாலத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
எதிரே வரும் வாகனத்திற்காக ஒதுங்கினால் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் அபாயம் உள்ளது. விபத்து நிகழும் முன்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.