/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பசுந்தாள் உரவிதை மானியத்தில் வழங்கல் பசுந்தாள் உரவிதை மானியத்தில் வழங்கல்
பசுந்தாள் உரவிதை மானியத்தில் வழங்கல்
பசுந்தாள் உரவிதை மானியத்தில் வழங்கல்
பசுந்தாள் உரவிதை மானியத்தில் வழங்கல்
ADDED : ஜூன் 11, 2024 04:52 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு, மண்ணுயிர் காக்கும் பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், மண்ணுயில் காப்போம் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-25ல், 22 இனங்களுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பசுந்தாள் உர உபயோகத்தை விவசாயிகளிடையே ஊக்குவித்து, மண் வளம் காக்கும் வகையில், ஆயக்கட்டு, இறவைப் பாசன பகுதிகளில் 12 ஏக்கரில், 1.20 கோடி ரூபாய் மானியத்தில் விதை வழங்கப்பட உள்ளது.
வட்டார வேளாண் விரிவாக்கம் மையம் வாயிலாக, பசுந்தாள் உர விதை, ஒரு கிலோ 99.50 ரூபாய்; இதில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
பசுந்தாள் உர பயிரை , 35-45 நாட்கள் வரை அல்லது பூக்கும் தருணத்திற்கு முன் மடக்கி உழவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக, மண்ணில் உள்ள கண்ணிற்கு புலப்படாத பல கோடி நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டு, பசுந்தாள் உர பயிர்களில் உள்ள வேரோட்டங்கள் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் வெளியாகி, பயிர்கள் செழித்து வளர உதவுகிறது.
விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ உரம் வழங்கப்படும். விவசாயிகள் நேரடியாக உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.