/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருத்தணி ஆர்.டி.ஓ.,விடம் மனு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருத்தணி ஆர்.டி.ஓ.,விடம் மனு
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருத்தணி ஆர்.டி.ஓ.,விடம் மனு
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருத்தணி ஆர்.டி.ஓ.,விடம் மனு
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருத்தணி ஆர்.டி.ஓ.,விடம் மனு
ADDED : ஜூன் 15, 2024 12:49 AM

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீட்டுமனை இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அதே பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்கக்கோரி திருத்தணி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் மாமண்டூர் கிராமத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு சமத்துவ நகர் என பெயரிட்டு முன்மாதிரியான திட்டத்தை செயல்படுத்த கிராம சபையில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்நிலையில் நேற்று மாமண்டூர் ஊராட்சி தலைவர் அம்சா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருத்தணி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., தீபாவை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்ததாவது:-
திருத்தணி வருவாய்துறை அதிகாரிகள் மாமண்டூர் கிராமத்தில் விளிம்பு நிலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு ஒளிபெறும் வகையில் மாமண்டூர் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேபோல் மாமண்டூர் கிராமத்தில் தனிநபர் ஒருவர் 50 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
ஆக்கிரமிப்பு இடத்திற்கு பட்டா பெறவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.