/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ எளாவூர் ரயில்வே மேம்பாலம் புதர்கள் ஆக்கிரமித்து அச்சுறுத்தல் எளாவூர் ரயில்வே மேம்பாலம் புதர்கள் ஆக்கிரமித்து அச்சுறுத்தல்
எளாவூர் ரயில்வே மேம்பாலம் புதர்கள் ஆக்கிரமித்து அச்சுறுத்தல்
எளாவூர் ரயில்வே மேம்பாலம் புதர்கள் ஆக்கிரமித்து அச்சுறுத்தல்
எளாவூர் ரயில்வே மேம்பாலம் புதர்கள் ஆக்கிரமித்து அச்சுறுத்தல்
ADDED : ஜூன் 15, 2024 12:48 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜாரில் இருந்து சுண்ணாம்புகுளம் நோக்கி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. மாநில நெடுஞ்சாலைதுறையினர் பராமரிப்பில் அந்த ரயில்வே மேம்பாலம் உள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் அந்த மேம்பாலம் வழியாக தினசரி கடந்து செல்கின்றனர். அந்த மேம்பாலத்தில் நெடுஞ்சாலைதுறையினர் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் மேம்பால சாலையோரம் ஏராளமான செடிகள் மற்றும் புதர்கள் மண்டி கிடக்கின்றன.
சாலையோரம் மண்டிய மண்ணை அகற்றாததால், அதில் ஐந்து அடி உயர செடிகள் வளர்ந்துள்ளன. வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடுத்தடுத்து மழைக்காலம் என்பதால், இதுபோன்று மேலும் பல செடிகள் மேம்பால சாலையை மறைக்கும் அளவிற்கு வளர நேரிடும். அதற்கு முன் எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மாநில நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.