/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தீக்குளித்து இறந்த வாலிபர் மனைவி கலெக்டரிடம் மனு தீக்குளித்து இறந்த வாலிபர் மனைவி கலெக்டரிடம் மனு
தீக்குளித்து இறந்த வாலிபர் மனைவி கலெக்டரிடம் மனு
தீக்குளித்து இறந்த வாலிபர் மனைவி கலெக்டரிடம் மனு
தீக்குளித்து இறந்த வாலிபர் மனைவி கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 09, 2024 11:02 PM
திருவள்ளூர்:வீடு இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து கும்மிடிப்பூண்டியில் இறந்த வாலிபரின் மனைவி மற்றும் தாய் திருவள்ளூர் கலெக்டரிடம் நிவாரணம் கோரி நேற்று மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி நேதாஜி நகரில் கல்யாணி என்பவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வருவாய் துறையினர் கடந்த 4ம் தேதி அகற்ற சென்றனர்.
அப்போது, கல்யாணியின் மகன் ராஜ்குமார், 33 எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார். காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர், அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இச்சம்பவத்தில் தாசில்தார் உள்ளிட்ட மூவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இறந்தவரின் சடலத்தை உறவினர்கள் இதுவரை பெறாமல், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த ராஜ்குமார் தாய் கல்யாணி, மனைவி நிவேதா நேற்று திருவள்ளூர் கலெக்டரிடம் மனு அளித்தார். அம்மனுவில், '5 லட்சம் ரூபாய் நிதி உதவி ராஜ்குமார் மனைவிக்கு அரசு வேலை, அரசு சார்பில் வீடு கட்டித் தரவேண்டும்' என, கூறியுள்ளார். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.