/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மக்கள் குறைதீர் கூட்டம் 377 மனுக்கள் ஏற்பு மக்கள் குறைதீர் கூட்டம் 377 மனுக்கள் ஏற்பு
மக்கள் குறைதீர் கூட்டம் 377 மனுக்கள் ஏற்பு
மக்கள் குறைதீர் கூட்டம் 377 மனுக்கள் ஏற்பு
மக்கள் குறைதீர் கூட்டம் 377 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 15, 2024 11:02 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில், 377 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில், நிலம் சம்பந்தமாக 125, சமூக பாதுகாப்புதிட்டம் 70, வேலை வாய்ப்பு வேண்டி 45, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 53 மற்றும் இதரதுறை 84 என, மொத்தம் 377 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்டவருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.