/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ துார்ந்துபோன கசுவா கிராம குளம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு துார்ந்துபோன கசுவா கிராம குளம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
துார்ந்துபோன கசுவா கிராம குளம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
துார்ந்துபோன கசுவா கிராம குளம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
துார்ந்துபோன கசுவா கிராம குளம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 19, 2024 01:16 AM

திருவள்ளூர்:கசுவா கிராமத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான குளம், துார்ந்துபோய் உள்ளது. இதை துார் வாரி சீரமைக்க கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் ஒன்றியம் திருநின்றவூர் அடுத்த கசுவா கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில், ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். திருநின்றவூர் பிரதான சாலையில் இருந்து ராமநாதபுரம் கிராமத்தில் இருந்து இடதுபுறம் கசுவா கிராமம் இயற்கை சூழலில் அமைந்மதுள்ளது.
இந்த கிராமத்தின் அருகில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்து, அப்பகுதியில் இயற்கையாக, நிலத்தடி நீரை வழங்கி வருகிறது.
தற்போது இந்த குளம் முழுதும் முட்செடிகள் வளர்ந்து, பாழடைந்து வருகிறது.
எனவே, இந்த குளத்தை மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு, முட்செடி, புதரை அகற்ற, சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.