/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய பரேஸ்புரம் பயணியர் நிழற்குடை போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய பரேஸ்புரம் பயணியர் நிழற்குடை
போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய பரேஸ்புரம் பயணியர் நிழற்குடை
போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய பரேஸ்புரம் பயணியர் நிழற்குடை
போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய பரேஸ்புரம் பயணியர் நிழற்குடை
ADDED : மார் 14, 2025 02:06 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது பரேஸ்புரம் கிராமம். இங்கு திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பரேஸ்புரம் வேணுகோபாலபுரம், ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் திருவள்ளூர், அரக்கோணம் நகரங்களுக்கு பேருந்து வாயிலாக பயணிக்கின்றனர்.
பயணியர் வசதிக்காக கட்டப்பட்ட நிழற்குடையை சுற்றிலும், அரசியல்கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு விளம்பர போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால், நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து பயணியர் கூறியதாவது:
ஊராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை சுற்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஊராட்சி அதிகாரிகள் விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.