/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 4 வழிச்சாலை பணியால் இடையூறு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் 4 வழிச்சாலை பணியால் இடையூறு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
4 வழிச்சாலை பணியால் இடையூறு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
4 வழிச்சாலை பணியால் இடையூறு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
4 வழிச்சாலை பணியால் இடையூறு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 14, 2025 02:07 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்டது அரக்கோணம் ----- திருவள்ளூர் நெடுஞ்சாலை. இச்சாலை 24 கி.மீ., கொண்டது.
இச்சாலையில் திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து அரக்கோணம் வரையிலான 9 கி.மீ., சாலையை முதற்கட்டமாக நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது.
தற்போது வீரராகவபுரம் பகுதியில் சாலையோரத்தில் பள்ளம் தோண்டி, ஜல்லிக்கற்கள் நிரப்பி, சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு, சாலையோரத்தில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் இருக்கும் பகுதிகளில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக, எச்சரிக்கை பலகையோ அல்லது தடுப்போ அமைக்கப்படவில்லை.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
அதேபோல் நாகதாங்கல் பகுதியில் சாலையில் கொட்டப்பட்ட ஜல்லியால் இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவித்து செல்கின்றனர். இவர்கள் தாமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், சாலையோரத்தில் எச்சரிக்கை பலகை அல்லது தடுப்பு அமைத்து, சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.