Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நிதி பற்றாக்குறையால் சுடுகாடு பராமரிப்பில் சிக்கல் ஊராட்சி தலைவர்கள் புலம்பல்

நிதி பற்றாக்குறையால் சுடுகாடு பராமரிப்பில் சிக்கல் ஊராட்சி தலைவர்கள் புலம்பல்

நிதி பற்றாக்குறையால் சுடுகாடு பராமரிப்பில் சிக்கல் ஊராட்சி தலைவர்கள் புலம்பல்

நிதி பற்றாக்குறையால் சுடுகாடு பராமரிப்பில் சிக்கல் ஊராட்சி தலைவர்கள் புலம்பல்

ADDED : ஜூன் 18, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம், 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில், இறந்தவர்களின் இறுதி சடங்கு செய்வதற்கு சுடுகாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுடுகாட்டில் எரிமேடை, ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி மற்றும் சுற்றுசுவர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்படுகின்றன.

மேலும் சுடுகாட்டையும் ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பராமரித்து வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான ஊராட்சிகளில் சுடுகாடு பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் இறுதி சடங்கின் போது மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

உதாரணமாக சின்னகடம்பூர் கிராமம் அருகே உள்ள சுடுகாடு பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் வளர்ந்துள்ளன.

சுடுகாடு செல்லும் நுழைவு வாயிலிலும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால், இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அதே போல் பெரியகடம்பூர் பகுதியில் ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என மூன்று பிரிவு சமூகத்தினர் ஒரே இடத்தில் சுடுகாடு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சமத்துவ சுடுகாட்டிற்கு சுற்றுசுவர், தண்ணீர் வசதி ஆகியவை இல்லை. இப்படி அனைத்து ஊராட்சிகளிலும் சுடுகாடுகள் பராமரிப்பின்றி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து சுடுகாடுகளிலும் அடிப்படை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு செலவு மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மத்திய, மாநில அரசு நிதியும் ஊராட்சிகளுக்கு சரியாக வழங்கப்படாததால், குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளே செய்து தரமுடியவில்லை.

இந்நிலையில் சுடுகாட்டை எப்படி பராமரிப்பது. மாநில நிதிக்குழு மூலம் குறைந்த நிதி ஓதுக்கீடு செய்வதால் ஊராட்சிகளில் பணியாற்றும், பம்ப் ஆப்ரேட்டர், துாய்மை பணியாளர், மின்மோட்டார் பழுது பார்ப்போர் போன்ற மாதந்திர செலவுக்கு கூட பணம் இல்லாமல் கடன் வாங்கி செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us