/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஊத்துக் க ோட் டை யில் பெருகி வரும் பேனர் கலாசாரம் ஊத்துக் க ோட் டை யில் பெருகி வரும் பேனர் கலாசாரம்
ஊத்துக் க ோட் டை யில் பெருகி வரும் பேனர் கலாசாரம்
ஊத்துக் க ோட் டை யில் பெருகி வரும் பேனர் கலாசாரம்
ஊத்துக் க ோட் டை யில் பெருகி வரும் பேனர் கலாசாரம்
ADDED : ஜூன் 18, 2024 06:15 AM

திருவள்ளூர்: நெடுஞ்சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டும் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலையோர உயரமான கட்டடங்கள் மீது பேனர்கள் வைப்பது மற்றும் மொபைல்போன் டவர்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த நெடுஞ்சாலையில் திருமழிசை, வெள்ளவேடு, புதுச்சத்திரம், அரண்வாயல் குப்பம், மணவாளநகர் உட்பட பல பகுதிகளில் விளம்பர பேனர் வைப்பது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அனுமதியில்லாமல் வைக்கப்படும் உயரமான கட்டடங்களில் வைக்கப்படும் மெகா சைஸ் விளம்பர பேனர்களால் மற்றும் மொபைல்போன் டவர்களால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் சில இடங்களில் உயரமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த மெகா சைஸ் விளம்பர பதாகைகள் வைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அதன் பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்தி வைக்க வேண்டும்.
ஆனால் நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டங்கள் மீது வைக்கப்படும் மெகா சைஸ் விளம்பர பேனர்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேனர்கள் வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது பேனர் வைப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.