/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புது குடியானுாரில் வார சந்தை திறப்பு புது குடியானுாரில் வார சந்தை திறப்பு
புது குடியானுாரில் வார சந்தை திறப்பு
புது குடியானுாரில் வார சந்தை திறப்பு
புது குடியானுாரில் வார சந்தை திறப்பு
ADDED : ஜூன் 09, 2024 11:05 PM
சோளிங்கர்,: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம், கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்டது புதுகுடியானுார் கிராமம்.
கொடைக்கல் கூட்டு சாலையில் வாரசந்தை நடந்து வந்தது. இதனால், இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
வாரசந்தையை கூட்டு சாலையில் இருந்து இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன், புது குடியானுார் கூட்டு சாலையில், வாரசந்தை வளாகம் கட்டப்பட்டது.
இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டும், திறக்கப்படாமல் கிடந்தது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில், இந்த வாரசந்தை வளாகம் நேற்று திறக்கப்பட்டது.
சோளிங்கர் எம்.எல்.ஏ., முனிரத்தினம், வாரசந்தை வளாகத்தை திறந்து வைத்தார். இந்த வளாகம் திறக்கப்பட்டதால், கொடைக்கல் கூட்டு சாலையில் போக்குவரத்து நெரிசல் முடிவுக்குவரும் என பகுதிவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.