/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முத்துரெட்டிகண்டிகையில் ரேஷன் கடை திறப்பு முத்துரெட்டிகண்டிகையில் ரேஷன் கடை திறப்பு
முத்துரெட்டிகண்டிகையில் ரேஷன் கடை திறப்பு
முத்துரெட்டிகண்டிகையில் ரேஷன் கடை திறப்பு
முத்துரெட்டிகண்டிகையில் ரேஷன் கடை திறப்பு
ADDED : ஜூன் 20, 2024 12:47 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சி உட்பட்டது முத்துரெட்டிகண்டிகை கிராமம். அங்குள்ள மக்கள், 2 கி.மீ., தொலைவில் உள்ள சிறுபுழல்பேட்டை ரேஷன் கடையில் பொருட்கள் பெற்று வந்தனர்.
சிரமத்திற்கு ஆளான மக்கள், தங்கள் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், சிறுபுழல்பேட்டை கிராமத்தில் இருந்து, 182 குடும்ப அட்டைகள் பிரித்து, முத்து ரெட்டிகண்டகை கிராமத்தில் உள்ள வாடகைகட்டடம் ஒன்றில் பகுதி நேர ரேஷன் கடைஏற்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது.