ADDED : ஜூன் 20, 2024 12:45 AM
பெரியபாளையம்,:பெரியபாளையம் அருகே, பனப்பாக்கம் கிராமத்தில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற் கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்து கொண்டு இருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கும்மிடிப்பூண்டி சிலப் பதிகாரன், 26 என்பவதும், 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, சிலப்பதிகாரனை கைது செய்தனர்.