/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஒரு லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பு கலெக்டர் 'திடுக்' தகவல் ஒரு லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பு கலெக்டர் 'திடுக்' தகவல்
ஒரு லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பு கலெக்டர் 'திடுக்' தகவல்
ஒரு லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பு கலெக்டர் 'திடுக்' தகவல்
ஒரு லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பு கலெக்டர் 'திடுக்' தகவல்
ADDED : ஜூன் 29, 2024 09:41 PM
திருவள்ளூர்:''இந்தியாவில் வயிற்றுப்போக்கால் ஆண்டிற்கு ஒரு லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர், '' என, கலெக்டர் பிரபுசங்கர் பேசினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வயிற்றுப் போக்கு தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
தேசிய சுகாதாரக் கொள்கை 2017ம் ஆண்டின் நோக்கம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதாகும்.
தமிழகத்தில் தற்போது, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 17.3 ஆக உள்ளது.
நம் நாட்டில் ஆண்டிற்கு ஒரு லட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறக்கின்றனர். வயிற்று போக்கிற்கான முக்கிய காரணம், பிறந்த குழந்தைகளுக்கு 'சீம்பால்' புகட்டப்படாதது, ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுக்காதது; சுகாதாரமற்ற குழந்தை வளர்ப்பு முறைதான்.
சுகாதார துறையினர் அனைத்து தாய்மார்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த திட்டம் துவங்கிய ஐந்து நாட்களுக்குள் ஒவ்வொரு அங்கன்வாடி பணியாளரும், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், 'ORS' உப்பு சர்க்கரை கரைசல் வினியோகிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்களில், தாய்மார்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் மீரா, முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.