ADDED : ஜூன் 29, 2024 08:05 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர், நேற்று சென்னை சென்ட்ரல் செல்வதற்காக நடைமேடை மூன்றில் காத்திருந்தார்.
அப்போது, சென்னை - சென்ட்ரல் செல்லும் ரயில், இரண்டாவது நடைமேடைக்கு வந்தது. மேற்கண்ட தொழிலாளி நடைபாலத்தை பயன்படுத்தாமல், தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து விசாகபட்டினம் நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்தார். வழக்கு பதிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், விசாரித்து வருகின்றனர்.