/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பைக்கில் சென்ற முதியவர் லாரி டயரில் சிக்கி பலி பைக்கில் சென்ற முதியவர் லாரி டயரில் சிக்கி பலி
பைக்கில் சென்ற முதியவர் லாரி டயரில் சிக்கி பலி
பைக்கில் சென்ற முதியவர் லாரி டயரில் சிக்கி பலி
பைக்கில் சென்ற முதியவர் லாரி டயரில் சிக்கி பலி
ADDED : ஜூன் 29, 2024 08:06 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே வேர்க்காடு கிராமத்தில் வசித்தவர் பழனி, 55. செங்குன்றம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி நோக்கி டூ-- வீலரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கவரைப்பேட்டையில், நெரிசலான போக்குவரத்துக்கு இடையே சென்றவர், தடுமாறி கிழே விழுந்தார்.
அப்போது ஆந்திரா நோக்கி சென்ற சரக்கு லாரியின் பின் டயரில் சிக்கி உயிரிழந்தார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.