ADDED : ஜூன் 25, 2024 11:57 PM
திருத்தணி, திருத்தணி ஜோதிசாமி தெருவில் உள்ள இரண்டாவது தானியங்கி ரயில்வே கேட் பகுதியில், 45 வயது மதிப்புள்ள ஆண் ஒருவர் நேற்று மதியம் 1:00 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, ரேணிகுண்டா மார்க்கத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் மோதியதில், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இறந்தவர் பெயர், விலாசம் தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் ரயில் நிலையம் மற்றும் பஜார் பகுதியில், வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகழிவுகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்தது. அரக்கோணம் ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.