ADDED : ஜூன் 25, 2024 11:57 PM
ஊத்துக்கோட்டை,பெரியபாளையம் அருகே, திருக்கண்டலம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் திருட்டு மணல் எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பெரியபாளையம் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு ஜே.சி.பி., உதவியுடன், மூன்று லாரிகளில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர்.
போலீசாரை கண்டதும் ஓட்டுனர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்திச் சென்றபோது, வாணியஞ்சத்திரம் பகுதியைச் சேர்ந்த லாரிஓட்டுனர் கமலநாதனை,47 கைது செய்தனர். தொடர்ந்து மூன்று லாரிகளை போலீசார்பறிமுதல் செய்தனர்.