/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கனரக வாகனம் மோதி மயிலாப்பூர் காவலர் பலி கனரக வாகனம் மோதி மயிலாப்பூர் காவலர் பலி
கனரக வாகனம் மோதி மயிலாப்பூர் காவலர் பலி
கனரக வாகனம் மோதி மயிலாப்பூர் காவலர் பலி
கனரக வாகனம் மோதி மயிலாப்பூர் காவலர் பலி
ADDED : ஜூன் 02, 2024 12:18 AM
கும்மிடிப்பூண்டி:சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 29. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை சிறப்பு காவல் படையில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டியில் உள்ள நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக,கே.டி.எம் டியூக்' இருசக்கர வாகனத்தில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தார்.
பொன்னேரி அடுத்த பஞ்செட்டி அருகே செல்லும்போது, பின்னால் வந்த கார்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரி, ராஜ்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்து, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.