Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 16 ஆண்டாக சுடுகாடுக்கு இடம் கேட்டு நேதாஜி நகர் முஸ்லிம்கள் காத்திருப்பு

16 ஆண்டாக சுடுகாடுக்கு இடம் கேட்டு நேதாஜி நகர் முஸ்லிம்கள் காத்திருப்பு

16 ஆண்டாக சுடுகாடுக்கு இடம் கேட்டு நேதாஜி நகர் முஸ்லிம்கள் காத்திருப்பு

16 ஆண்டாக சுடுகாடுக்கு இடம் கேட்டு நேதாஜி நகர் முஸ்லிம்கள் காத்திருப்பு

ADDED : ஜூலை 04, 2024 09:22 PM


Google News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை நேதாஜி நகரில், 300 முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான அடக்க ஸ்தலம், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் உள்ள மசூதியின் பின்புறம் உள்ளது.

அந்த இடம் கும்மிடிப்பூண்டியில் வசிக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பொதுவான இடம் என்பதால், இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும், 2 கி.மீ., தொலைவில் இருக்கும் காரணத்தால், நேதாஜி நகரில் வசிக்கும் முஸ்லிம்களுக்காக, தனி அடக்க ஸ்தலம் ஒதுக்க வேண்டும் என, கடந்த 2008ம் ஆண்டு முதல் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்களுக்கு பொதுவாக, தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், சமத்துவ சுடுகாடிற்கு இடம் ஒதுக்கப்படும் என, 2014ம் ஆண்டு, தேர்வழி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, அதே ஆண்டே தேர்வழி கிராமம், சர்வே எண்: 502/2 மற்றும் 503ல் உள்ள 90 சென்ட் இடம், மூன்று மதத்தினருக்கான சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்டது.

அதை எதிர்த்து, தேர்வழி கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆட்சேபனை தெரிவித்து, அரசுக்கு மனு அளித்தனர்.

அதன்படி, அரசு தரப்பில் நடந்த சமாதான கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அதன்பின், கிணற்றில் போட்ட கல் போன்று அந்த விவகாரத்தை அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால், கைக்கு எட்டியது கிடைக்காமல் போன வேதனையில் நேதாஜி நகர் முஸ்லிம்கள் உள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, 16 ஆண்டு கால எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என, நேதாஜி நகர் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us