/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மேல்பொதட்டூர் பூவராக சுவாமி கோவில் எதிரே திறந்தநிலை கழிவுநீர் கால்வாய் மேல்பொதட்டூர் பூவராக சுவாமி கோவில் எதிரே திறந்தநிலை கழிவுநீர் கால்வாய்
மேல்பொதட்டூர் பூவராக சுவாமி கோவில் எதிரே திறந்தநிலை கழிவுநீர் கால்வாய்
மேல்பொதட்டூர் பூவராக சுவாமி கோவில் எதிரே திறந்தநிலை கழிவுநீர் கால்வாய்
மேல்பொதட்டூர் பூவராக சுவாமி கோவில் எதிரே திறந்தநிலை கழிவுநீர் கால்வாய்
ADDED : ஜூன் 17, 2024 03:52 AM

பொதட்டூர்பேட்டை : பொதட்டூர்பேட்டை அடுத்த மேல்பொதட்டூரில் அமைந்துள்ளது பழமையான பூவராகசுவாமி கோவில். இந்த கோவிலில் நித்திய வழிபாடுகளுடன், தனுர்மாத உற்சவம், பிரம்மோற்சவம், புரட்டாசி சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடந்து வருகின்றன.
பொதட்டூர்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு வருகின்றனர். பழமையான இந்த கோவில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கோவில் எதிரே கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கழிவுநீர் கால்வாயை சூழ்ந்திருந்த புதர் சமீபத்தில் வெட்டி அகற்றப்பட்டது. வெட்டப்பட்ட செடி, கொடிகள் அதே பகுதியில் சாலையில் வீசப்பட்டுள்ளன.
இதனால், பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், திறந்தநிலையில் உள்ள கால்வாயில் மீண்டும் மீண்டும் செடி, கொடிகள் வளர்ந்து கழிவுநீர் வெளியேற தடையாக அமைகின்றன. திறந்தநிலை கால்வாயாக உள்ளதால், சுவாமி புறப்பாட்டின் போதும் பக்தர்கள் தவறி கால்வாயில் விழும் நிலை உள்ளது. இதனால், கால்வாய்க்கு கான்கிரீட் மேல்தளம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.