/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கழுத்தை அறுத்த மாஞ்சா நுால் கொடுங்கையூர் வாலிபர் 'அட்மிட்' கழுத்தை அறுத்த மாஞ்சா நுால் கொடுங்கையூர் வாலிபர் 'அட்மிட்'
கழுத்தை அறுத்த மாஞ்சா நுால் கொடுங்கையூர் வாலிபர் 'அட்மிட்'
கழுத்தை அறுத்த மாஞ்சா நுால் கொடுங்கையூர் வாலிபர் 'அட்மிட்'
கழுத்தை அறுத்த மாஞ்சா நுால் கொடுங்கையூர் வாலிபர் 'அட்மிட்'
ADDED : ஜூன் 02, 2024 12:29 AM
புழல்:கொடுங்கையூரைச் சேர்ந்தவர் திலீப்குமார், 32; தனியார் நிறுவன ஊழியர். முன்தினம் இரவு 7:00 மணிக்கு, மதுரவாயல் - புழல் மேம்பாலம் வழியாக, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பாலத்தில் இருந்து இறங்கும் போது, எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நுால், அவரது கழுத்தை சுற்றியது.
இதில் நிலை தடுமாறி விழுந்தார். மாஞ்சா நுால், அவரது கழுத்திலும், கையிலும் சிறிய காயத்தை ஏற்படுத்தியது.
புழல் போலீசார், அவரை மீட்டு, ரெட்டை ஏரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பறந்துவந்த மாஞ்சா நுால் குறித்து விசாரிக்கின்றனர்.
சென்னையில் காற்றாடி பறக்கவிட மாஞ்சா நுாலை பயன்படுத்த தடை உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. போலீசார், மாஞ்சா நுால் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.