/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு
குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு
குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு
குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 02, 2024 12:41 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 350க்கும் மேற்பட்ட தெருக்களில், 14,000த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுதவிர 1,000த்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன.
மேலும், திருத்தணி முருகன் கோவில் உள்ளதால், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
இதனால், நகராட்சியில் ஒரு நாளைக்கு மட்கும் மற்றும் மட்கா குப்பை என, 16 முதல், 18 டன் சேகரிக்கப்படுகிறது. இதற்காக நகராட்சி நிர்வாகம், 30 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 105 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை நியமித்துள்ளது.
இவர்கள், பேட்டரி ஆட்டோ, டிராக்டர் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பை சேகரித்து, மட்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சிலர் குப்பையை துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்காமல், பொது இடங்கள் மற்றும் சாலையோரம் கொட்டுக்கின்றனர்.
பலமுறை நகராட்சி ஊழியர்கள் குப்பை கொட்டக் கூடாது என அறிவுறுத்தியும், தொடர்ந்து சாலையோரம் கொட்டி வந்தனர்.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் குப்பை போடுவதை தடுக்க, புதிய முயற்சி எடுத்துள்ளது.
அதன்படி, இங்கு செங்கற்கள் வைத்து, மஞ்சள் பூசி சிலைகள் போல் அமைத்தும், வண்ணக்கோலம் போட்டும், 'இங்கு குப்பை கொட்டக் கூடாது' என, விழிப்புணர்வு வாசகம் எழுதி, நகர வாசிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மேட்டுத் தெரு, சித்துார் சாலை, காந்தி ரோடு, பைபாஸ் சாலை, செங்குந்தர் நகர், முருக்கப்ப நகர் உள்ள 15 இடங்களில், கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.