/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பவானியம்மன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம் பவானியம்மன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்
பவானியம்மன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்
பவானியம்மன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்
பவானியம்மன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜூலை 09, 2024 10:38 PM
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருவர்.
வரும், 12ம் தேதி இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று காலை, 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரகக ேஹாமம், லட்சுமி ேஹாமம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடக்கிறது.
நாளை காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன சமர்ப்பணம், சதுர்வேத பாராயணம், மாலை, 3:00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, ேஹாமம் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான வரும், 12ம் தேதி காலை, 4:00 மணிக்கு அவபிரதயாகம், யாக பூஜை, பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு நடக்கிறது.
காலை, 6:00 மணிக்கு ஸ்ரீபவானி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடைபெறும். காலை, 10:00 மணிக்கு பவானி அம்மனுக்கு மகா அபிேஷகம், தீராராதனையும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் விநாயகர், பவானி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.