ADDED : ஜூலை 09, 2024 11:00 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் சாய்பாபா கோவில் அருகே திருவள்ளூர் நகர காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குமரேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமரன், 24 என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் என்னும் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் முத்துக்குமரனை கைது செய்து அவரிடமிருந்து 6, 320 ரூபாய், ஒரு மொபைல் போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.