Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாநில தடகள போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாநில தடகள போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாநில தடகள போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாநில தடகள போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : ஜூன் 24, 2024 11:33 PM


Google News
திருவள்ளூர் : மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்ட தடகள சங்க செயலர் மோகன்பாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் மாநில அளவிலான ஜூனியர் தடகள 'சாம்பியன்ஷிப்' போட்டியை வரும் 29ல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்துகிறது.

ஓட்டம், பந்து எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.

6, 8, 10, 12 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் வயதுவரம்பற்றோர் ஆகிய பிரிவுகளில் தடகள போட்டி நடைபெறும்.

இப்போட்டியில் பங்கேற்க நாளை 26 கடைசி நாளாகும். ஆர்வம் உள்ளோர் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கத்தில் 044-24767131 மற்றும் 95661 98156 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us