/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சொட்டு நீர்ப்பாசன முறையில் தர்பூசணி சாகுபடியில் ஆர்வம் சொட்டு நீர்ப்பாசன முறையில் தர்பூசணி சாகுபடியில் ஆர்வம்
சொட்டு நீர்ப்பாசன முறையில் தர்பூசணி சாகுபடியில் ஆர்வம்
சொட்டு நீர்ப்பாசன முறையில் தர்பூசணி சாகுபடியில் ஆர்வம்
சொட்டு நீர்ப்பாசன முறையில் தர்பூசணி சாகுபடியில் ஆர்வம்
ADDED : மார் 14, 2025 01:46 AM

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்தில் சொர்ணவாரி, சம்பா ஆகிய பருவங்களில், 45,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. சம்பா பருவத்திற்கு பின், கோடைகால பயிர்களான பச்சைப்பயறு, தர்பூசணி, எள் ஆகியவற்றை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது சொட்டுநீர் பாசன முறையில் தர்பூசணி வளர்ப்பதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விளைநிலங்களை உழுது, மேட்டுப்பாத்தி கட்டி, பிளாஸ்டிக் பைப்களை பொருத்தி, அதன் மீது பிளாஸ்டிக் பாய்களை போட்டு மூடப்படுகிறது.
பின், சீரான இடைவெளியில், பிளாஸ்டிக் பாய்களில் சிறிய துவாரம் அமைத்து, அதில் தர்பூசணி விதைகள் பதியம் செய்யப்படுகிறது.
ஒரு வாரத்தில் விதைகளில் முளைப்பு ஏற்பட்டு செடிகள் வளர துவங்குகின்றன. இந்த முறையால் பணியாட்கள் தேவை குறைவு, சொட்டு நீர் பாசனம் என்பதால் நீர்மேலாண்மை ஆகியவற்றால் குறைந்த செலவில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மடிமைகண்டிகை கிராமத்தை சேர்ந்த விவசாயி எஸ். சத்தியநாராயணன் கூறியதாவது:
வழக்கமாக விளைநிலங்களை உழுது தர்பூசணி விதைகளை விதைப்போம். பின், அவற்றிற்று தண்ணீர் பாய்ச்சுவதற்காக கால்வாய்கள் அமைக்க வேண்டும். சீரான இடைவெளியில் களைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது அதிக செலவினங்களை ஏற்படுத்தும்.
தற்போது மேட்டுப்பாத்தி சொட்டு நீர்பாசன முறையால் களைகள் அதிகம் வருவதில்லை. குழாய்கள் வழியாக தண்ணீர் நேரிடையாக செடிகளின் வேர்களுக்கு சென்றடைகிறது. மருந்தினங்களையும் பிரத்யோக குழாய்கள் வழியாக தண்ணீருடன் கலந்து செடிகளுக்கு பாய்ச்சுவதால், அவற்றின் சத்துக்கள் நேரிடையாக செடிகளுக்கு கிடைக்கிறது. சொட்டு நீர் பாசன முறையால் அதிக மகசூல் கிடைக்கும். தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.