/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆரணி பேரூராட்சியின் குப்பை குவியல் ஆற்று கால்வாயில் நிரம்பி வழியும் அவலம் ஆரணி பேரூராட்சியின் குப்பை குவியல் ஆற்று கால்வாயில் நிரம்பி வழியும் அவலம்
ஆரணி பேரூராட்சியின் குப்பை குவியல் ஆற்று கால்வாயில் நிரம்பி வழியும் அவலம்
ஆரணி பேரூராட்சியின் குப்பை குவியல் ஆற்று கால்வாயில் நிரம்பி வழியும் அவலம்
ஆரணி பேரூராட்சியின் குப்பை குவியல் ஆற்று கால்வாயில் நிரம்பி வழியும் அவலம்
ADDED : ஜூலை 11, 2024 01:09 AM

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில் தினசரி, மூன்று டன் குப்பை சேகரமாகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள், பெரியபாளையம் நெடுஞ்சாலை ஓரம் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குவிக்கப்படுகிறது. அங்கு குப்பைகள் தரம் பிரித்து அகற்றப்படுகின்றன.
மலைபோல் குவிக்கப்படும் குப்பைகளை, ஆரணி பேரூராட்சி நிர்வாகம் முறையாக கையாளத் தவறுவதால், கிடங்கில் உள்ள குப்பைகள் நிரம்பி வழிகின்றன. அப்படி நிரம்பி வழியும் குப்பைகள், அதனை ஒட்டியுள்ள ஆரணி ஆற்றுக் கால்வாய் முழுதும் பரவிக்கிடக்கிறது.
மழைக்காலங்களில் அந்த கால்வாய் வழியாக கழிவுகள் அனைத்தும் ஆரணி ஆற்றில் கலக்கும் நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆற்றுநீர் மாசு அடைந்தால் அதன்கீழ் உள்ள ஏரிகளும் மாசு அடையும் சூழல் ஏற்படும் என இயற்கை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். கால்வாயில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, இனிவரும் காலங்களில் இது போன்று கால்வாயில் குப்பைகள் நிரம்பி வழியாதபடி உடனுக்குடன் திடக்கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.