/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொண்டாபுரத்தில் பயனில்லாத நிழற்குடை கொண்டாபுரத்தில் பயனில்லாத நிழற்குடை
கொண்டாபுரத்தில் பயனில்லாத நிழற்குடை
கொண்டாபுரத்தில் பயனில்லாத நிழற்குடை
கொண்டாபுரத்தில் பயனில்லாத நிழற்குடை
ADDED : ஜூலை 11, 2024 01:10 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்டது கொண்டாபுரம் கிராமம். திருத்தணியில் இருந்து சோளிங்கருக்கு கொண்டாபுரம் வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கொண்டாபுரம், அம்மனேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பேருந்து வாயிலாக திருத்தணி மற்றும் சோளிங்கருக்கு தங்களின் அத்தியாவசிய பணிகள் காரணமாக தினசரி பயணிக்கின்றனர்.
கொண்டாபுரம், புச்சிநாயுடுகண்டிகை கூட்டுச்சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அதையொட்டி சிறு மின்விசைக் குழாயும் உள்ளது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், நிழற்குடையும், சிறு மின்விசைக் குழாயும் சேதம் அடைந்துள்ளன.
கொண்டாபுரம் பகுதிவாசிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, நிழற்குடை மற்றும் சிறு மின்விசைக் குழாயை சீரமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பட்டில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் அமைந்துள்ளதுயு.ஆர்.ஆர்.கண்டிகை கிராமம். இந்த கிராமத்தினர் அத்தியாவசிய பணிகள் காரணமாக, தினசரி திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டுக்கு சென்று வருகின்றனர். இந்த மார்க்கத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், யு.ஆர்.ஆர். கண்டிகை கிராமத்தில் பேருந்துநிறுத்தம் இருந்தும், பயணியர் நிழற்குடை இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையோரத்தில் வெயில் மற்றும் மழையில் நனைந்தபடி காத்திருக்க முடியாமல் அருகில் உள்ள வீடுகளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சில சமயத்தில் பேருந்தை தவறவிடும் சூழலும் ஏற்படுகிறது. யு.ஆர்.ஆர்.கண்டிகையில் இருக்கை வசதியுடன் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.