/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அடிக்கடி பழுது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அடிக்கடி பழுது
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அடிக்கடி பழுது
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அடிக்கடி பழுது
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அடிக்கடி பழுது
ADDED : ஜூன் 19, 2024 01:23 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள எஸ்கலேட்டர் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுவதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளி கள் கடும் அவதிப்பட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட தலைநகரத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ரயில் நிலையத்தில், மும்பை, ஜோலார் பேட்டை, பெங்களூரு, கோவை, திருப்பதி உள்ளிட்ட விரைவு ரயில்கள், 250க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன.
இங்கு, ஒன்று முதல் ஆறு நடைமேடைகள் உள்ளன. இதில்,2வது—3வது நடைமேடையில் எஸ்கலேட்டர் வசதி உள்ளது. இதன் மூலம் சென்னை மார்கத்தில் செல்லும் பயணிகள் எஸ்கலேட்டர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, வாரத்தில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் எஸ்கலேட்டர் இயங்குவதில்லை.
இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்துடன் படிகள் ஏறிச் செல்வவேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே மாற்றித்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் நலன் கருதி 1வது முதல் 6வது நடைமேடை வரை எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.