/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உடற்பயிற்சி பூங்கா அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை உடற்பயிற்சி பூங்கா அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
உடற்பயிற்சி பூங்கா அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
உடற்பயிற்சி பூங்கா அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
உடற்பயிற்சி பூங்கா அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
ADDED : ஜூலை 22, 2024 06:10 AM

மீஞ்சூர்:சென்னையில் கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மீஞ்சூர் - வண்டலுார் இடையே, 61 கி.மீ., தூரத்திற்கு வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு, 2020ல் பயன்பாட்டிற்கு வந்தது.
சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், இந்த சாலை இருப்பதால், சாலையோரங்களில் உள்ள இடங்களில் பல்வேறு எதிர்கால திட்ட பணிகளை மேற்கொள்ள, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக இளைஞர்கள், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், உடற்பயிற்சி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மீஞ்சூரில் 2.57 கோடி ரூபாயில் அமையும் உடற்பயிற்சி மையத்திற்கான பணிகளை, நேற்று ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவர் சேகர்பாபு, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
உடற்பயிற்சி பூங்கா எவ்வாறு அமைய உள்ளது. அதில் இடம்பெறும் உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து, வரைபடங்களுடன் திட்ட அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கினர்.
திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதில், கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ., - டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.