/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி
ADDED : ஜூலை 17, 2024 12:31 AM
பொதட்டூர்பேட்டை, பொதட்டூர்பேட்டை அடுத்த ஜங்காலிபள்ளியை சேர்ந்தவர் தாமோதரன். இவர், பொதட்டூர்பேட்டை அரசு நடுநிலை பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி ஸ்ரீமதி, 2014ல் இறந்து விட்டார். கடந்த ஏப்., 29ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு தாமோதரனும் இறந்தார்.
இந்நிலையில், இவர்களின் மகள் லித்திகா, 12, மகன் கோகுலகண்ணன், 10, ஆகியோர் ஸ்ரீமதியின் சகோதரியின் பாதுகாப்பில் வளர்ந்து வருகின்றனர்.
பகுதி நேர ஆசிரியராக குறைந்த சம்பளத்தில் குழந்தைகளை வளர்த்து வந்த தாமோதரன் இறந்த நிலையில், தவித்த அவரது குழந்தைகளுக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று நிதியுதவி கோரினர். திருவள்ளூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக நிதியுதவி வேண்டி கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்கள் நிதியுதவி வழங்கினர். 82,200 ரூபாய் சேகரிக்கப்பட்டது. இந்த பணம் நேற்று தமோதரனின் குழந்தைகளின் அஞ்சலக கணக்கில் செலுத்தப்பட்டது.