/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சேதமான தடுப்பணையால் பாலாபுரத்தில் விவசாயிகள் கவலை சேதமான தடுப்பணையால் பாலாபுரத்தில் விவசாயிகள் கவலை
சேதமான தடுப்பணையால் பாலாபுரத்தில் விவசாயிகள் கவலை
சேதமான தடுப்பணையால் பாலாபுரத்தில் விவசாயிகள் கவலை
சேதமான தடுப்பணையால் பாலாபுரத்தில் விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 17, 2024 12:30 AM

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமம், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட எல்லையோர மலைச்சரிவில் அமைந்துள்ளது.
இந்த மலைப்பகுதி சிறந்த நீர்ப்பிடிப்பு தலமாக விளங்குகிறது. இங்கிருந்து துவங்கும் ஓடைகள், பாலாபுரம் வழியாக ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் பல்வேறு ஏரிகளைக் கடந்து, கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. பாலாபுரம் ஊராட்சியில், சிறியதும் பெரியதுமாக ஏராளமான ஓடைகள் பாய்ந்து வருகின்றன.
இதில், தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாலாபுரம் கிராமத்தின் தெற்கில் பாயும் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வலுவிழந்துள்ளது.
தடுப்பணையின் அடித்தளம் சேதமடைந்துள்ளதால், நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. பக்கவாட்டு தடுப்புச் சுவரும் சரிந்து விழுந்து வருகிறது.
பெருவெள்ளம் ஏற்பட்டால், தடுப்பணை முற்றிலுமாக நாசமாகும் நிலை உள்ளது. இதனால், சுற்றுப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துஉள்ளனர்.
சேதம் குறைவாக இருக்கும் போதே இந்த தடுப்பணையை சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.