ADDED : ஜூன் 26, 2024 12:50 AM

மீஞ்சூர், மீஞ்சூர் ரயில் நிலைய வளாகத்தில் நேற்று மாலை, பெண் மயில் ஒன்று சுற்றித்திரிந்தது. மாலை, 5:00 மணிக்கு, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் புறநகர் ரயில், அங்குள்ள மூன்றாவது பிளாட்பார்ம் வழியாக சென்றபோது, பெண் மயில் அதில் சிக்கியது. இதில் துாக்கி வீசப்பட்டு, காயம் அடைந்த மயில் இறந்தது.
கும்மிடிப்பூண்டி வனத்துறையினர் வந்து மயிலின் உடலை கைப்பற்றி சென்றனர்.