/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நேரடி மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீட்டிப்பு நேரடி மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீட்டிப்பு
நேரடி மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீட்டிப்பு
நேரடி மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீட்டிப்பு
நேரடி மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : ஜூலை 20, 2024 06:06 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டிசிப்காட் வளாகத்தில் அரசினர் ஐ.டி.ஐ., - தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. குளிர்சாதன டெக்னீசியன், மெக்கானிக், சர்வேயர், இன்-ப்ளான்ட் லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்டன்ட் ஆகியநான்கு தொழிற்பிரிவுகளில் அங்கு பயிற்சிவழங்கப்படுகிறது.
பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை மட்டுமின்றி சைக்கிள், லேப்டாப், சீருடை, காலணிகள், பாட புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இந்த கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை கடந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இம்மாதம் 1ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை, நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தற்போது, நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.