/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் பேருந்து நிலைய நடைபாதையில் ஆக்கிரமிப்பு திருவள்ளூர் பேருந்து நிலைய நடைபாதையில் ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் பேருந்து நிலைய நடைபாதையில் ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் பேருந்து நிலைய நடைபாதையில் ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் பேருந்து நிலைய நடைபாதையில் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூன் 13, 2024 01:02 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட வெளியூர்களுக்கும், சுற்றியுள்ள கிராமங்களுக்கும் 150க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இங்கு, வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருவோர் அமர பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி மற்றும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தில், 20க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடைகளை வாடகைக்கு எடுத்தோர், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். மேலும், பூக்கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால், பயணியர் நிற்க இடமின்றி பரிதவிக்கின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலைய நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.