/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தடப்பெரும்பாக்கத்தில் குப்பை கழிவுகளை கையாள நிரந்தர இடம் ஒதுக்க கோரிக்கை தடப்பெரும்பாக்கத்தில் குப்பை கழிவுகளை கையாள நிரந்தர இடம் ஒதுக்க கோரிக்கை
தடப்பெரும்பாக்கத்தில் குப்பை கழிவுகளை கையாள நிரந்தர இடம் ஒதுக்க கோரிக்கை
தடப்பெரும்பாக்கத்தில் குப்பை கழிவுகளை கையாள நிரந்தர இடம் ஒதுக்க கோரிக்கை
தடப்பெரும்பாக்கத்தில் குப்பை கழிவுகளை கையாள நிரந்தர இடம் ஒதுக்க கோரிக்கை
ADDED : ஜூலை 15, 2024 11:07 PM

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், 2,000த்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் இருந்து, தினமும், 3,000- 4,000 கிலோ குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
இவற்றை ஒரே இடத்தில் கொட்டி கையாள்வதற்கு தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் எங்கும் இடவசதி இல்லை.
இதனால், சேகரிக்கப்படுபவை, நீர்நிலைகள், சுடுகாடு, தனியார் இடங்களில் கொட்டி குவித்து எரிக்கப்படுகிறது.
மீஞ்சூர் ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ள இங்கு, குப்பையை கையாள்வதற்கு என எவ்வித கட்டமைப்பும் ஏற்படுத்தாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
பல்வேறு பகுதிகளில் மக்கும், மக்காதவை என குப்பை பிரித்து கையாளப்படுகிறது. இங்கும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ள, கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இடம் இல்லாமல் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பின் நிதியும் ஒன்றிய நிர்வாகத்தால் திரும்ப பெறப்பட்டது
நகராட்சி, பேரூராட்சிக்கு நிகராக குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என பல்வேறு புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வளர்ந்து வரும் பகுதியாக தடப்பெரும்பாக்கம் இருக்கிறது. குப்பையை கையாள்வதற்கு இடம் தேர்வு செய்து, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாவிட்டால், வரும் காலங்களில், இப்பகுதி சுகாதார சீர்கேடு அதிகம் உள்ள பகுதியாக மாறும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பை கையாள்வதற்கு இடவசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.