/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணியில் காமராஜர் பிறந்த நாள் விழா திருத்தணியில் காமராஜர் பிறந்த நாள் விழா
திருத்தணியில் காமராஜர் பிறந்த நாள் விழா
திருத்தணியில் காமராஜர் பிறந்த நாள் விழா
திருத்தணியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 15, 2024 11:06 PM

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் மத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காமராஜரின், 112வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில், காமராஜர் படம் வைத்து மலர் மாலை அணிவித்து மாணவர்களுக்கு இனிப்புகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன் வழங்கினார்.
தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் இடையே, கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் கவிதை ஆகிய போட்டி நடந்தது.
இதில் வெற்றி பெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பரந்தாமன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகன் துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பரிசு மற்றும் சான்றுகள் வழங்கினர்.
திருத்தணி நகரத்தில் அரசினர் ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சுதந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சக்தி பப்ளிக் ஸ்கூல் உள்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காராமஜர் பிறந்த நாள் விழா ஒட்டி மாணவர்கள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஊத்துக்கோட்டை வட்டார ஐக்கிய நாடார்கள் சங்கம் சார்பில், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.
நாடார் சங்க தலைவர் பரமசிவம் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் மற்றும் காமராஜர் படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக பஸ் நிலைய வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.