/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடியில் செயல்படாத புறக்காவல் நிலையம் கும்மிடியில் செயல்படாத புறக்காவல் நிலையம்
கும்மிடியில் செயல்படாத புறக்காவல் நிலையம்
கும்மிடியில் செயல்படாத புறக்காவல் நிலையம்
கும்மிடியில் செயல்படாத புறக்காவல் நிலையம்
ADDED : ஜூலை 23, 2024 01:03 AM

கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் போலீஸ் நிலையம் உள்ளது. பஜார் பகுதியில் நடைபெறும் அசம்பாவிதங்களை தடுக்க போலீசாரின் முழு நேர கண்காணிப்பு அவசியம் என்ற நிலை உள்ளது.
அதன்படி கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், அங்குள்ள கே.எல்.கே., அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளி அருகே நவீன புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு, ஜூலை மாதம், 13ம் தேதி, அந்த புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி, பஜார் பகுதியின், முக்கிய சந்திப்புகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
அதன் நேரடி காட்சிகளை, புறக்காவல் நிலையத்தில் இருந்தபடி, எல்.இ.டி., திரையில் கண்காணித்து, அசம்பாவிதம் கண்டறியப்படும் இடத்தில், ஒலி பெருக்கி மூலம், எச்சரிக்கும் வசதியை வியாபாரிகள் சங்கத்தினர் ஏற்படுத்தி தந்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் அதை முறையாக பராமரிக்க தவறியதன் விளைவாக, அடுத்த சில ஆண்டுகளில் பயனற்று போனது.
முறையான பராமரிப்பின்றி கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் பழுதாகி போயின.
புறக்காவல் நிலையத்தில், வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா தொடர்பான கருவிகள் மற்றும் எல்.ஈ.டி., டிவி பழுதாகி போனது. இருப்பினும் பஜார் பகுதியின் பாதுகாப்பு கருதி, பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த புறக்காவல் நிலையத்தில் போலீசார் இருந்தனர்.
சில மாதங்களுக்கு முன் கால்வாய் பணிக்காக அந்த புறக்காவல் நிலையத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிக்கப்பட்டன. இடித்த சுவர் பூசப்படாததால், அந்த புறக்காவல் நிலையம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள், வியாபாரிகளின் பாதுகாப்பு கருதி கிடப்பில் போடப்பட்ட புறக்காவல் நிலையத்திற்கு புத்துயிர் அளித்து, அனைத்து வசதிகளும் புதிதாக ஏற்படுத்தி, கும்மிடிப்பூண்டி, பஜார் பகுதியை, போலீசார் முறையாக கண்காணிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.