/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மேல்நல்லாத்துார் ஏரி மதகு சேதம்: கால்வாயில் வீணாகும் மழைநீர் மேல்நல்லாத்துார் ஏரி மதகு சேதம்: கால்வாயில் வீணாகும் மழைநீர்
மேல்நல்லாத்துார் ஏரி மதகு சேதம்: கால்வாயில் வீணாகும் மழைநீர்
மேல்நல்லாத்துார் ஏரி மதகு சேதம்: கால்வாயில் வீணாகும் மழைநீர்
மேல்நல்லாத்துார் ஏரி மதகு சேதம்: கால்வாயில் வீணாகும் மழைநீர்
ADDED : ஜூலை 22, 2024 05:59 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சியில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் மேல்நல்லாத்துார் ஏரி உள்ளது. இந்த ஏரியை இப்பகுதிவாசிகள் 150 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த ஏரியில் தற்போது பெய்து வரும் மழையில் நீர் சேகரமாகி உள்ளது.
ஏரியின் மதகு சேதத்தால் வெளியேறும் மழைநீர் அருகில் உள்ள தொழிற்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் பகுதி வழியே வெளியேறி வீணாகி வருகிறது.
நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த சில தினங்களாக ஏரியின் கரைகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் சேதமடைந்த மதகு பகுதியையும் சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதகை சீரமைத்து மழைநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.