ADDED : ஜூன் 18, 2024 05:54 AM

திருத்தணி - திருவாலங்காட்டிற்கு நேரடி பஸ் இயக்கப்படுமா?
திருவாலங்காடு பகுதியில், முருகன் கோவிலின் துணை கோவிலான வடராண்யேஸ்வர் கோவில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், சார்—பதிவாளர் அலுவலகம், அரசினர் மேல்நிலைப் பள்ளி போன்றவை உள்ளன.
இந்நிலையில், திருவாலங்காடு, ஒன்றியத்தில் உள்ள, 42 ஊராட்சி மக்கள் அரசு நலதிட்ட உதவிகள் பெறுவதற்கும், மாணவர்களுக்கு தேவையான சான்றுகள் பெறுவதற்கும் திருத்தணியில் இயங்கி வரும் தாசில்தார் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து செல்ல வேண்டியுள்ளன.
ஆனால், திருத்தணி--- திருவாலங்காட்டிற்கு நேரடியாக அரசு பேருந்து இயக்கப்படுவதில்லை. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் மார்கத்தில் இயக்கப்படும், இரண்டு பேருந்துகள் மூலம் வரவேண்டியுள்ளன. எனவே மாவட்ட கலெக்டர் திருத்தணி-திருவாலங்காடு நேரடி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
--- எஸ்.குமரவேல் திருவாலங்காடு.