Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் உத்தரவு

போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் உத்தரவு

போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் உத்தரவு

போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் உத்தரவு

ADDED : ஜூன் 25, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல், சட்டவிரோதமாக மது விற்பனை போன்றவற்றை ஒழித்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இதில் திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாசபெருமாள் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது :

கோட்ட அளவில் வாரந்தோறும் சப் -கலெக்டர், வருவாய் கோட்டாசியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.,க்கள் மற்றும் கலால் டி.எஸ்.பி.,க்களும் பங்கேற்க வேண்டும்.

அரசு டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனையை தடை செய்ய வேண்டும். விதிமீறினால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், வெளிமாநில மதுபானங்கள், கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து 98403 27626 என்ற மொபைல் எண்ணிலும் 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - பொது வெங்கட்ராமன், கலால் உதவி ஆணையர் ரங்கராஜன், கோட்டாட்சியர்கள் திருவள்ளூர் கற்பகம், திருத்தணி தீபா, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us