வாலிபரை தாக்கிய மூவர் மீது வழக்கு
வாலிபரை தாக்கிய மூவர் மீது வழக்கு
வாலிபரை தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : மார் 13, 2025 10:51 PM
பூண்டி:திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 52. இவர் சென்றம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
சீனிவாசன் வட்டி கட்ட தவறியதால் முருகனுக்கு ஆதரவாக பூண்டியை சேர்ந்த செல்வம், 40, திவாகர், 26, சந்தோஷ், 25 ஆகிய மூவரும் கடந்த 10ம் தேதி சீனிவாசன் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சீனிவாசன் மகன் லோகேஷ், 19 என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூவரும் லோகேஷை ஆபாசமாக பேசி இரும்பு கம்பியால் தாக்கினர்.
படுகாயமடைந்த லோகேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புல்லரம்பாக்கம் போலீசார் மூவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.